தவறான அர்த்தப்படுத்தலுடன் பகிரப்படும் சுமந்திரனின் கருத்து
இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்படுவது என்ன ...
by Anonymous |
ஆகஸ்ட் 17, 2024
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற முடியாது என ஜனாதிபதி புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்ததாக செய்திகள் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த சந்திப்பின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த காணொளியானது Newsfirst அலைவரிசையில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்ததை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அந்தக் காணொளியில், அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் தமக்கு உண்டு என்பதை காட்டுவதற்காக தமிழ் மக்களின் ஆதரவு தனக்கு தேவை என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும் “இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்” என்பதை அவர் அறிவார் என்றுமே சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
LINK : https://www.facebook.com/share/v/bXeJJZkYnJjzNRrJ/?mibextid=Le6z7H
ஆகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என ஜனாதிபதி புரிந்து கொண்டுள்ளார் என சுமந்திரன் கூறியதாக இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் கூற்று சுமந்திரனால் அவ்வாறு கூறப்பட்ட ஒன்றல்ல என்பது தெளிவாகின்றது.