அவுஸ்திரேலிய அணிக்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லையா?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸிடம் (Pat Cummins) கொடுக்காது மேடையை விட்டு உடனே வெளியேறும் விதமான காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
by Anonymous |
நவம்பர் 20, 2023
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிண்ணத்தை வழங்கினார். அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸிடம் (Pat Cummins) கொடுக்காது மேடையை விட்டு உடனே வெளியேறும் விதமான காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்தக் காணொளியுடன் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான விமர்சித்தும், அவதூறு கருத்துக்களை பதிவு செய்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த காணொளி குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு கிண்ணத்தை வழங்க வந்த பிரதமர் மோடி, அவுஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்து கிண்ணத்தையும் வழங்கி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸிடம் உலகக்கிண்ணத்தை கொடுக்காது உடனடியாக வெளியேறும் காட்சிகள் அடங்கிய காணொளி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.