இலங்கையின் பாடகி லதா வல்பொல அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாரா?

லதா வல்பொல அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி போலியானது
by Anonymous |
ஜனவரி 6, 2024

இலங்கையின் பாடகி லதா வல்பொலவுக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக யூடியூப் காணொளி ஒன்று வெளியாகியுள்ளதை அடுத்து, இந்த காணொளி முகப்புத்தக பக்கத்திலும் பகிரப்பட்டதையடுத்து, இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
இலங்கையின் பாடகி லதா வல்பொல மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சுகயீனமடைந்துள்ளதாகவும் அவரது மகளிடம் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த காணொளியில் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், திருமதி லதா வல்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அல்லது சத்திரசிகிச்சைக்கு உள்ளான புகைப்படங்கள் உள்ளடக்கப்படவில்லை. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியின் அடிப்படையில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், திருமதி லதவல்பொலவின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப உறவினர்களில் ஒருவரான (பேரன்) திசர பண்டாரவிடம் வினவியபோது, “பாட்டி வீட்டில் மிகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தீவிர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான வதந்தி முற்றிலும் பொய்யானது. பொய்ப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” எனத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் கணக்கிலும் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, லதா வல்பொல அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி போலியானது என factseeker உறுதிப்படுத்துகின்றது.