பாராளுமன்ற வருடாந்திர உட்புற விளையாட்டுப் போட்டியிலேயே கொட்டஹச்சி மற்றும் சதுரங்க அபேசிங்க ஆகியோர் மேசைப்பந்து விளையாடினர்.

இலங்கை பாராளுமன்றத்தின் வருடாந்திர உட்புற விளையாட்டுப் போட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
by Anonymous |
மார்ச் 25, 2025

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் மேசைப்பந்து விளையாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதே புகைப்படம் ஹிரு நியூஸ் பேஸ்புக் பக்கத்திலும், “பட்ஜெட் விவாதத்தின் போது பிரதி அமைச்சர் சதுரங்கவுடன் கொட்டஹச்சி மேசைப்பந்து விளையாடுகிறார்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ளது,
இந்தப் புகைப்படம் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்படுவதுடன், மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் விநோதமாக உள்ளனர் போன்ற கருத்துகள் அதில் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக இந்தப் புகைப்படம் தொடர்பில் factseeker ஆராய்ந்தது.
இலங்கை பாராளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பில், இந்த புகைப்படத்துடன் தொடர்புடைய நிகழ்வின் பல புகைப்படங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது இலங்கை பாராளுமன்றத்தின் வருடாந்திர உட்புற விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.
இந்த உள்ளகப் போட்டியில் நடைபெற்ற இரட்டையர் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியும் வெற்றி பெற்றதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கான வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அதன்படி, இந்தப் புகைப்படம் பாராளுமன்றத்தில் நடைபெறும் வருடாந்திர உள்ளரங்கு போட்டியின் மேசைப்பந்து இரட்டையர் போட்டியின் போது பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹாச்சி ஆகியோருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.