சமூகவலைதளங்களில் பகிரப்படும் “கனேமுல்ல சஞ்சீவ கொலை” சந்தேக நபரின் AI காணொளி

அக்காணொளியை 'deepware' இணையத்தளத்தின் மூலம் ஆராய்ந்ததில் இது 'AI காணொளி' என்பது தெரியவந்தது.
by Anonymous |
பிப்ரவரி 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினருடன் சிரித்து பேசுவது போன்ற காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/share/1ACmXTSXCJ/?mibextid=WC7FNe
https://www.facebook.com/share/v/184Fu7eSgy/?mibextid=wwXIfr
சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அக் காணொளியை உன்னித்து அவதானித்ததில் சில தெளிவற்ற அம்சங்களை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள வாகனத்தின் கதவு திறந்திருக்கின்ற நேரத்தில் வாகனம் நகர்வது போன்ற காட்சிகளும் இக் காணொளியில் உள்ள நபர்களின் கைகள் மற்றும் முகங்கள் தெளிவற்றதாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை யூகிக்க முடிந்தது.
மேலும், இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என deepware இணையத்தளத்தின் மூலம் ஆராய்ந்ததில் இது ‘AI காணொளி‘ என்பது தெரியவந்தது. ஆகவே இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஊடகங்களால் நேற்று வெளியிடப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியே இந்த AI காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் கீழே.
ஆகவே, சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற “கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் பொலிஸ் அதிரடி படையினருடன் சிரித்து பேசுவது போன்ற காணொளி” செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.