டிரம்ப் – ஜில் பைடன் மோதல் காணொளி உண்மையல்ல

X தளத்தின் "GROK" எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை பயன்படுத்தி இக் காணொளி உருவாக்கப்பட்டிருக்கலாம்.
by Anonymous |
டிசம்பர் 17, 2024

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடனுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது போன்ற காணொளி ஒன்று X தளத்தில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://x.com/BehizyTweets/status/1865563137443004836
இக் காணொளி பலராலும் பகிரப்பட்டு வருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
ஐந்தாண்டுகளுக்கு முன் குண்டு வெடிப்புக்குளாகிய நோட்ரே-டேம் தேவாலயத்தின் மறு திறப்பு விழா கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி இடம்பெற்றது. உலகத் தலைவர்களின் பங்கேற்புடன் இவ்விழா இடம்பெற்றதோடு டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜில் பைடன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
டிரம்ப் மற்றும் பைடன் ஆகியோரின் இச் சந்திப்பு குறித்து சமூகவலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. பைடன் குடும்பத்தினர் டிரம்ப்க்கு ஆதரவளிப்பதாக பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில் பிரான்சில் உள்ள புகைப்பட கலைஞரான பாஸ்கல் லீ செக்ரெடைன் இனால் எடுக்கப்பட்ட டிரம்ப் மற்றும் பைடனின் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன.
https://www.cbsnews.com/amp/news/trump-fragrance-jill-biden-fight-fight-fight-perfumes-cologne/
இந்நிலையிலேயே டொனால்ட் டிரம்ப்க்கும் ஜில் பைடனுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது போன்ற காணொளி ஒன்று X தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இக்காணொளியை உன்னித்து அவதானித்ததில் ஜில் பைடனின் முகம் சிதைவுற்று இருப்பதையும் முடியின் அசாதாரண அசைவுகளையும் அவதானிக்க முடிந்தது.
X தளத்தின் “GROK” எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை பயன்படுத்தி இக் காணொளி உருவாக்கப்பட்டிருக்கலாம். “GROK” என்பது புகைப்படங்களை காணொளிகளாக மாற்றும் ஓர் AI தொழிநுட்பமாகும்.
ஆகவே, X தளத்தில் பகிரப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கும் ஜில் பைடனுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது போன்ற காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.