விடுதலை புலிகள் கொடியுடன் உள்ள இளம்பெண்ணின் புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்டதா?

இப் புகைப்படம் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பிரான்சில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது
by Anonymous |
நவம்பர் 29, 2024

சமீபத்திய நாட்களில் மாவீரர் தினம் குறித்து பல்வேறு பதிவுகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விடுதலை புலிகள் அமைப்பின் கொடியுடன் ஒரு இளம்பெண் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின் சின்னங்கள் மற்றும் கொடிகள் என்பவற்றை பயன்படுத்தி நினைவேந்தல்களை நடத்த கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வடக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் என்ற பதிவுகளுடன் இப் புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இந்த புகைப்படத்தைப் பதிவேற்றிய FaceBook கணக்கை ஆராய்ந்தபோது, அக் கணக்கில் எந்தவொரு புகைப்படமும் இல்லை என்பதை அறிய முடிந்தது.
https://www.facebook.com/profile.php?id=61569366599756
மேலும், ஆராய்ந்த போது இதே பெயரில் உள்ள ஒரு புதுப்பிக்கப்பட்ட Facebook கண்ணகை அவதானிக்க முடிந்தது. அக்கணக்கில் இப் பெண் பிரான்சில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.facebook.com/jeanne.ammu
மேலும், அப் பெண்ணின் Instagram மற்றும் TikTok கணக்குகளையும் அவதானிக்க முடிந்தது.
https://www.instagram.com/jeanne.ammu/reels/
@ammu_ranjithkumar
இச் சமூகவலைதள பக்கங்களை ஆராய்ந்ததில் இப் புகைப்படம் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி அன்று பதிவேற்றப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மே மாதம் பிரான்சில் இடம் பெற்ற இலங்கை தமிழர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்ததில் ‘Tamil Guardian’ செய்தி தளத்தில் வெளியாகிய செய்தி ஒன்றை அவதானிக்க முடிந்தது.
https://www.tamilguardian.com/content/french-tamils-commemorate-tamil-genocide-remembrance-day
அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை Google Map மூலம் ஆராய்ந்ததில் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இடமும் புகைப்படத்தில் உள்ள இடமும் ஒரே இடம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
https://bit.ly/4eNtrPj
ஆகவே, விடுதலை புலிகள் அமைப்பின் கொடியுடன் இளம்பெண் எடுத்துக்கொண்ட புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பதையும் அப் புகைப்படம் பிரான்சின் Clichy என்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.