கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடனமாடுவதாக பகிரப்படும் காணொளி உண்மையானதா?

இக் காணொளியில் நடனமாடுவது இந்திய நடன கலைஞரான கிரண் ஜோபால் என்பதை அறிய முடிந்தது.
by Anonymous |
நவம்பர் 21, 2024

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடனமாடுவதாக காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://www.facebook.com/watch/?v=1045179873989898&rdid=XhYWQCiGeNQY1EYx
இக் காணொளியை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில், இக் காணொளியில் நடனமாடுவது இந்திய நடன கலைஞரான கிரண் ஜோபால் என்பதை அறிய முடிந்தது. மேலும் அவரது Instagram பக்கத்தில் இக் காணொளி வெளியிடப்பட்டுள்ளமையையும் உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடனமாடுவதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளியில் இருப்பது முத்தையா முரளிதரன் இல்லை என்பதையும் அக் காணொளியில் நடனமாடுவது இந்திய நடன கலைஞரான கிரண் ஜோபால் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.