வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம், ஆனால் இலங்கைக்கு இது முதல் பயணம் அல்ல
குழுவானது jetwing travels இன் முதல் ஐஸ்லாந்து சுற்றுலா குழுவென்றும் இப் பயணிகள் குழு "யோகா" தியான நிகழ்ச்சிக்காக நாட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
by Anonymous |
நவம்பர் 13, 2024
இலங்கைக்கு முதன்முறையாக ஐஸ்லாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
• https://www.facebook.com/share/p/1GKrKvJA4n/
• https://www.facebook.com/share/p/1XnNkB7M7z/
• https://www.facebook.com/share/p/1D5G5GJWLh/
இதே போல் பிரதான ஊடகங்களிலும் இது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
• https://bit.ly/4fAw6ww
• https://mawbima.lk/2024/11/05/tourists-arrive-from-iceland/
• https://www.virakesari.lk/article/197946
இது குறித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையிடம் FactSeeker வினவிய போது, “எங்கள் இணையதளத்தில் அனைத்து நாடுகளிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தனர்.
• https://www.sltda.gov.lk/en/statistics
அதன்படி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் பின்வருமாறு:
இது குறித்து மேலும் ஆராய்ந்ததில், செய்திகளில் பகிரப்பட்ட புகைப்படத்தில் உள்ள பதாகையை அவதானிக்க முடிந்தது. அப் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘baendaferdir’ பெயர் ஐஸ்லாந்தில் உள்ள சுற்றுல்லா நிறுவனத்தின் பெயர் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
• https://www.baendaferdir.is/
இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் திருமதி மதுபானி பெரேராவிடம் FactSeekeer வினவிய போது, இது அரசின் ஆதரவுடன் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
மேலும், இது குறித்து jetwing travels நிறுவனத்தின் ஏற்பாட்டாளர் விசேகன் சிவகுமாரிடம் FactSeeker வினவிய போது, இக் குழுவானது jetwing travels இன் முதல் ஐஸ்லாந்து சுற்றுலா குழுவென்றும் இப் பயணிகள் குழு “யோகா” தியான நிகழ்ச்சிக்காக நாட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
இது jetwing travels இந்த முதல் ஐஸ்லாந்து சுற்றுலா குழு என்பதால் நிறுவனத்தின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து இந்த வரவேற்பை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆகவே, இலங்கைக்கு முதன்முறையாக ஐஸ்லாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக பகிரப்படுகின்ற பதிவுகள் மாற்றும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.