Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

TEMU இலவசமாக மின்னணு சாதனங்களை வழங்குவதாக பகிரப்படும் போலிச் செய்தி

False
False

TEMU நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் பதிவு போலியானது.

by Anonymous |

ஜூன் 20, 2025

TEMU நிறுவனம் சட்டவிரோத இறக்குமதி செய்ததன் காரணமாக முடக்கப்படவுள்ளதாகவும் அதனால் அந் நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகவும் பதிவொன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

மேலும், TEMU நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதள கருத்துக் கணிப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் இந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அதற்கான இணைப்பு பதிவில் இணைக்கப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

2022 ஆம் ஆண்டு தொடங்கிய TEMU நிகழ்நிலை வணிக தளம், சீன விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் பல்வேறு உற்பத்திப் பொருட்களை வழங்கும் PDD holdings எனும் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இந்த தளம் மின்சாதனப் பொருட்கள், ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு உட்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறது.

இந்நிலையில் TEMU இவ்வாறொரு சட்டப் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதா என ஆராய்ந்ததில், இது தொடர்பான எந்தவொரு நம்பகமான தகவல்களும் கிடைக்கவில்லை.

மேலும், இப் பதிவில் வழங்கப்பட்ட இணையத்தள இணைப்பு உண்மையானதா என URLVoid மற்றும் Easy Demark போன்ற கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்த போது, அது ஒரு போலியான இணைப்பு என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆகவே, TEMU நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் பதிவு போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

Related Content

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection