P/500 வகை பரசிட்டமோல் வில்லைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதில்லை
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தி முற்றிலும் தவறானது என FactSeeker உறுதிப்படுத்துகிறது
by Anonymous |
அக்டோபர் 6, 2023
நாட்டின் சுகாதாரத்துறையில் இன்று நிலவும் சில நெருக்கடியான சூழ்நிலைகளால் மக்களை தவறாக வழிநடத்தும் பொய்ப் பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.
இவ்வாறான நிலைமைகளால், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் சில பிரச்சாரங்கள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித குழப்பகர நிலைமை இருப்பதையே வெளிப்படுத்துகின்றது.
இதற்கிடையில், பரசிட்டமோல் பி/500 உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் எனவே இந்த மருந்துகளை பாவிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கும் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருவதை Fact seekerஇனால் அவதானிக்க முடிந்தது.
‟இது ஒரு புதிய, மிகவும் வெள்ளை மற்றும் பளபளப்பான பரசிட்டமோல் வகையாகும், மேலும் இதில் உலகில் பரவும் மிகவும் மோசமாக பரவும் வைரஸ்களில் ஒன்றான ‘மச்சுபோ’ வைரஸ் இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது அதிக இறப்பு விகிதத்தை கொண்ட உலகின் மிக ஆபத்தான வைரஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது” இவ்வாறு சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியை வைத்தியர் பிரியதர்ஷினி கலப்பத்தியை Factseeker தொடர்பு கொண்டு வினவியது,
இதற்கு பதிலளித்த வைத்தியர், p/500 வகையிலான பரசிட்டமோல் வில்லைகள் இலங்கையில் பதிவு செய்யப்பட மருந்துகளில் ஒன்றல்ல எனவும் இலங்கையில் இந்த வில்லைகளை பெற்றுக்கொள்ள முடியாது, எனவே இவ்வாறு பரப்பப்படும் செய்தி பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தி முற்றிலும் தவறானது என Fact Seeker உறுதிப்படுத்துகிறது.