Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

NPPயின் பிரச்சாரகர் மௌலவி முனீர் கூறியதாக பகிரப்படும் போலிச்செய்தி

False
False

'Short News' இணையதளத்தின் சின்னத்தையும் பெயரையும் பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது

by Anonymous |

ஆகஸ்ட் 30, 2024

“எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய ஒரு விடயமாக ஓரினச்சேர்க்கையை (LGBTQ ) அனுமதித்துள்ளோம். ஓரினச்சேர்க்கை இஸ்லாத்தில் ஹராம் என்று எங்கும் கூறப்படவில்லை. எமது கொள்கை பற்றி முஸ்லிம்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்பில் அதன் பிரச்சாரகர் மௌலவி முனீர் கூறியதாக  செய்தியொன்று ‘ Short News’ எனும் இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக  வட்ஸ்-அப் குழுக்களில் செய்திகள் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

எனினும் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயுமாறு பலர் factseeker இடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இவ்வாறான ஒரு செய்தியை மௌலவி முனீர் தெரிவிக்கவில்லை எனவும், அதேபோல் ‘Short News’ எனும் இணையதளம் அவ்வாறான செய்தியொன்றை பிரசுரிக்கவில்லை என்பதையும் factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.

‘Short News’ எனும் இணையதளத்தின் பணிப்பாளர் றஸ்மின் அவர்களை தொடர்புகொண்டு இது குறித்து வினவியபோது, தமது இணையதளத்தில் அவ்வாறான எந்தவொரு செய்தியும் பிரசுரமாகியிருக்கவில்லை எனவும், தமது இணையதளத்தின் சின்னத்தையும் பெயரையும் பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

அத்துடன், இது குறித்து ஒரு மறுப்புச்செய்தியையும் ‘Short News’ இணையதளம் பிரசுரித்துள்ளது.
LINK :https://www.shortnews.lk/2024/08/fake-news-npp-shortnews.html

அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரச்சாரகர் மௌலவி முனீர் அவர்களிடம் இது குறித்து வினவியபோது, தான் எந்தவொரு ஊடகத்திற்கும் இவ்வாறான ஒரு செய்தியை வழங்கவில்லை எனவும், இவ்வாறு பகிரப்படும் கருத்தானது தனது நிலைப்பாடு அல்ல என்பதையும் தெரிவித்தார்.

ஆகவே வட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்படும் இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது என்பதுடன், போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 21, 2025

ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என பகிரப்படும் போலிச்செய்தி

மே 19, 2025

வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection