KFC இன் பெயரில் பகிரப்படும் பொய் பிரச்சாரம்

தமது உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ள சலுகைகள் மாத்திரமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுமென KFC கூறுகின்றது.
by Anonymous |
ஆகஸ்ட் 12, 2024

KFC இன் 73 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் உள்ள KFC உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச KFC சிக்கென் பக்கெட் வழங்கப்படுவதாக “KFC-Fans ta” மற்றும் “KFC-Fans ta2” எனும் முகநூல் பக்கங்களில் பகிரப்படும் பதிவுகளை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
“KFC இன் 73வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13 வரை ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என குறுஞ்செய்தி அனுப்புபவர்களுக்கு வவுச்சர்களை அனுப்புகிறோம். ஒவ்வொரு கூப்பனையும் எந்த KFC உணவகத்திலும் பயன்படுத்தி மூன்று பக்கெட் கோழி இறைச்சியை இலவசமாகப் பெறலாம்!” என்பதே அந்த பதிவாகும். இதற்கு பலர் பதிலளித்து வருவதையும் இப்பதிவினை அதிகம் பகிர்வதையும் அவதானிக்க முடிந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இப்படியான எந்த ஒரு சலுகைகளையும் KFC நிறுவனம் வழங்கவில்லை எனவும் KFCயின் உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ள சலுகைகள் மாத்திரமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் KFCயின் இலங்கைக் கிளை factseekerஇடம் தெரிவித்தது.
ஆகவே KFC இன் 73 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் உள்ள KFC உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச KFC சிக்கென் பக்கெட் வழங்கப்படுவதாக கூறும் பதிவுகள் போலியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.