Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

False
False

இலவச சலுகைகள் வழங்கப்படுவதாக எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் DIALOG நிறுவனத்தினால் வெளியிடப்படவில்லை.

by Anonymous |

ஜூன் 2, 2025

“பழைய DIALOG SIM வைத்திருப்பவர்களுக்கு இலவச டேட்டா!” என்ற தலைப்பில் ஒரு Whatsapp குறுஞ்செய்தியொன்று பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அச் செய்தி பின்வருமாறு,

“CONGRATULATIONS TO ALL DIALOG OLD CUSTOMERS
DIALOG is Offering Free Data to all OLD SIM CARD
✅6 Month Old Sim – 5GB
✅1 Year and above – 10GB
✅5 Years and above – 50GB
✅10 Years plus – 100GB

Hurry Now and check if your DIALOG SIM CARD is eligible for this offer
CHECK HERE👇
https://sureconnect.xyz/freedataoffer”

இது Whatsapp பயனர்களிடையே விரைவாகப் பரவி வருகின்ற நிலையில் FactSeeker க்கு கிடைக்கப்பெற்ற வேண்டுகோளுக்கு அமைய FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

DIALOG நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதள பக்கம் மற்றும் சமூகவலைதள பக்கங்களில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில், இத்தகைய சலுகைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் காணப்படவில்லை.

மேலும், இது குறித்து DIALOG நிறுவனத்திடம் FactSeeker வினவிய போது, இக் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டள்ளது போன்ற எந்தவொரு இலவச சலுகைகளும் DIALOG நிறுவனத்தினால் வழங்கப்படவில்லை என்றும் இவ்வகையான சலுகைகள் வழங்கப்படும் பட்சத்தில், அவை DIALOG வாடிக்கையாளர்களின் தொலைபேசிக்கு நேரடியாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆகவே, “பழைய DIALOG SIM வைத்திருப்பவர்களுக்கு இலவச டேட்டா!” என்ற தலைப்பில் Whatsapp இல் பகிரப்படுகின்ற இக் குறுஞ்செய்தி போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection