Dialog ஆண்டு இறுதியில் இலவச Data சேவை வழங்குகிறதா?

இலவச சலுகைகள் எதுவும் தமது நிறுவனத்தினால் வழங்கப்படவில்லை என Dialog Asayata Pvt. நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
by Anonymous |
நவம்பர் 22, 2024

இலங்கையின் பிரபல தொலைபேசி சேவை நிறுவனமான Dialog நிறுவனமானது ஆண்டு இறுதியில் இலவச Data சேவை வழங்குவதாக பதிவொன்று whatsapp செயலி ஊடாக அதிகம் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அப் பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
“DIALOG, வருட இறுதி பரிசாக அனைத்து பழைய SIM அட்டைகளுக்கும் இலவச Data வழங்குகிறது.
6 மாதங்கள் பழைய SIM – 10GB
1 வருடம் அல்லது அதற்கு மேல் பழைய SIM – 20GB
5G SIM கார்டு பயன்படுத்துபவர்கள் – 300GB”
இது தொடர்பில் Dialog Asayata Pvt. நிறுவனத்திடம் FactSeeker வினவியபோது, இவ்வாறானதொரு சலுகைகள் எதுவும் தமது நிறுவனத்தினால் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
ஆகவே,Dialog நிறுவனமானது ஆண்டு இறுதியில் இலவச Data சேவை வழங்குவதாக பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.