AI புகைப்படங்களின் ஊடாக போலிச்செய்திகள் பகிரப்படுகின்றன

செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலமாக தத்ரூபமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் போலிச்செய்திகள் பகிரப்படுவதை தொடர்ச்சியாக factseeker அவதானித்து வருவதுடன், அது குறித்து தெளிவுபடுத்தியும் வருகின்றது.
by Anonymous |
ஜூலை 2, 2024

இந்நிலையில், வயது முதிர்ந்த பாட்டியொருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் பறித்த மிளகாயை வைத்து நீளமான புகையிரதமொன்றை வடிவமைத்துள்ளதாகவும், அதேபோல் யாழ்ப்பாணத்தை பூர்விகமான கொண்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த விசேட பூ-கோவா என தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
“இலங்கையை சேர்ந்த இந்த பெண் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து மிளகாய்களை பறித்து நீளமான புகையிரதத்தை வடிவமைத்ததாகவும் முடிந்த வரை இதை Share செய்து ஜனாதிபதி அவர்கள் கண்ணில் பட வைப்போம்” என சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படமும்,
அதேபோல் “யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுந்தரேஸ்வரன் என்பவர் சுவிசில் இருந்து கொண்டுவந்த விசேட பூகோவா” என இன்னொரு புகைப்படமும் சமூக வலைத்தள பாவனையாளர்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது.
எனினும் இவ்விரு புகைப்படங்களும் AI தொழிநுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தெளிவாக வெளிப்படுவதுடன், அதனை factseeker உறுதிப்படுத்துகின்றது.