ஸ்ரீ தலதா மாளிகையில் திருமண ஜோடி புகைப்படமெடுத்தது சரியா ?
தலதா மாளிகைக்கு பாரம்பரியமான உடைகளை (ஏழு கழுத்தணிகள்) அணிந்து தம்பதிகள் வருவது தவறு
by Anonymous |
செப்டம்பர் 12, 2024
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் எடுக்கப்பட்ட திருமண புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. அப்புகைப்படங்கள் சர்ச்சைக்குரிய திரிபுகளுடன் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை கீழே உள்ள link இல் உள்ளது. https://www.facebook.com/share/p/RwRLvjqexYUWhuTH/
இது குறித்து தலதா மாளிகையின் நிர்வாக பிரிவினரிடம் factseeker வினவிய போது, இது தொடர்பில் விசாரிக்கவும், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராயவும் தலதா மாளிகை காவல் நிலையத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இப்புகைப்படங்கள் செயற்கை விளக்குகளை பயன்படுத்தி வரம்புக்கு மீறி எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து தலதா மாளிகை பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ சேனாதீரவிடம் factseeker வினவிய போது, தலதா மாளிகைக்கு பாரம்பரியமான உடைகளை (ஏழு கழுத்தணிகள்) அணிந்து தம்பதிகள் வருவது தவறு என்றும் இது சாதாரண படப்பிடிப்பு என்று தான் நினைப்பதாகவும் இந்தப் புகைப்படங்களை எடுப்பதில் தீங்கு விளைவிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளார்களா என விசாரிப்பதாகவும் கூறினார்.
மேலும், சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இது வர்த்தக ரீதியாக எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்றும் இந்த விடயம் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்கவிடம் factseeker வினவிய போது, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், புகைப்படத்தில் உள்ள தம்பதிகளை வரவழைக்கத் தேவை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இப்புகைப்படங்கள் நடிகர் தெவ்நக போரகே மற்றும் ஹஷினி வேதண்டவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் என்பதை அறியமுடிந்தது . இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது புகைப்படக் கலைஞர் லக்மால் சிங்ஹாரகே தனது முகநூல் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், புகைப்பட கலைஞர் லக்மால் சிங்ஹாரகேவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தம்பதிகளின் ஸ்ரீ தலந்த மாளிகையில் எடுத்த புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.