692.78 ரூபாய்க்கு KFCயின் “Menu Bucket 9 chicken pcs (M)” வழங்கப்படுவதாக போலி பிரசாரம்
இவ்வாறு எந்தவொரு சலுகையும் எம்மிடம் இல்லை என KFC தெரிவிக்கின்றது.
by Anonymous |
அக்டோபர் 18, 2024
KFC வழங்கும் “Menu Bucket 9 chicken pcs (M)” மெனு ரூ. 692.78 தொகைக்கு தற்போது கிடைப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் பகிரப்பட்டு வருகின்றது.
இதுவரையில் ரூ.8314.29 விற்கு வழங்கப்படும் இந்த மெனுவே தற்போது ரூ. 692.78 தொகைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை உண்மையென நம்பிப்பலர் சமூல வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதுடன், ஏமாற்று செயற்பாடு எனவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது,
இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ள KFC இன் உத்தியோகபூர்வ இணையதளத்தை பார்வையிட்டபோது, அதில் அவ்வாறான எந்தவொரு சலுகையும் வழங்கப்படுவதாக அவர்கள் அறிவித்திருக்கவில்லை.
https://www.kfc.lk/menu/mains/hot-and-crispy-chicken
இது குறித்து ஒரு சில KFC கிளைகளில் கேட்டறிந்தபோது, இவ்வாறு 692.78 ரூபாய்க்கு “Menu Bucket 9 chicken pcs (M)” வழங்கப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை எனவும், இவ்வாறு எந்தவொரு சலுகையும் எம்மிடம் இல்லை எனவும், பொய்யான தகவல் இவ்வாறு பகிரப்படுவதாகவும் தெரிவித்தனர்.
ஆகவே, KFCயில் 692.78 ரூபாய்க்கு “Menu Bucket 9 chicken pcs (M)” மெனு இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் இந்த விளம்பரம் உண்மை இல்லை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.