Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

259வது பிறந்த நாளைக் கொண்டாடும் முதியவர் என பகிரப்படும் AI புகைப்படம்

False
False

உலகில் இதுவரை பதிவாகிய மிகவும் வயதான நபராக பிரான்சைச் சேர்ந்த ஜீன் லூயிஸ் கல்மெண்ட் (Jeanne Louise Calment) எனும் பெண் குறிப்பிடப்படுகிறார்.

by Anonymous |

மே 23, 2025

முதியவர் ஒருவர் தனது 259 வது பிறந்த நாளை கொண்டாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா” “பாசாங்கு செய்யாமல் அவருக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிப்போம்” போன்ற பதிவுகளுடனேயே அப் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.

இப் புகைப்படத்தை அவதானித்ததில் இது ஒரு நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட படமாக இருந்தாலும் சில பயனர்கள் இதை உண்மை நிகழ்வாக நம்பி, தமது கருத்துக்களை பதிவிட்டு வருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

புகைப்படத்தில் காணப்பட்ட சில தெளிவற்ற அம்சங்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இதனைத் தொடர்ந்து, உலகில் உயிருடன் உள்ள வயதான நபர்கள் தொடர்பில் ஆராய்ந்ததில், CNN இணையதளத்தில் 2025 மே மாதம் வெளியான செய்தியின் படி, தற்போது உலகில் உயிருடன் இருக்கும் வயதான நபர் பிரித்தானியாவை சேர்ந்த எதெல் கட்டர்ஹாம் (Ethel Caterham) ஆவார். அவருக்கு 115 வயதும் 252 நாட்களும் ஆகியுள்ளன. மேலும், 1913க்கு முன்னால் பிறந்த இறுதி பிரித்தானியர் இவர் என்றும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC-யின் “Science Focus” சஞ்சிகையில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2024 டிசம்பர் மாத நிலவரப்படி, உயிருடன் உள்ள உலகின் மிக வயதான நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டொமிகோ இடோக்கா (Tomiko Itooka) ஆவார். அவருக்கு அந்த நேரத்தில் 116 வயதாக இருந்ததாகவும், இது மனிதர்களின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகம் எனவும் அத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.sciencefocus.com/the-human-body/oldest-person-in-the-world

இதேபோல், உலகில் இதுவரை பதிவாகிய மிகவும் வயதான நபராக பிரான்சைச் சேர்ந்த ஜீன் லூயிஸ் கல்மெண்ட் (Jeanne Louise Calment) எனும் பெண் குறிப்பிடப்படுகிறார். இவர் 1875 பிப்ரவரி 21ஆம் தேதி பிறந்தவராகும். தனது வாழ்க்கையில் 122 வருடங்கள் மற்றும் 164 நாட்கள் உயிர் வாழ்ந்த இவர், 1997 ஆகஸ்ட் 4 ஆம் திகதி மரணமடைந்தார்.

ஆகவே, முதியவர் ஒருவர் தனது 259வது பிறந்த நாளைக் கொண்டாடுவதை போல சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படம், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது. மேலும், உலகில் இதுவரை பதிவாகிய மிகவும் வயதான நபர் 122வது வயதில் மரணமடைந்தவர் என்பதையும் இது மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

ஊடகங்களை அச்சுறுத்தும் விதத்தில் சீன தூதரகம் அனுப்பியதாக பகிரப்படும் போலிக் கடிதம்

ஆகஸ்ட் 6, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection