ஹரிணி அமரசூரிய எடின்பேர்க் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி ஆவார்

கடந்த 2010 ஆம் ஆண்டு சமூக மானுடவியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்
by Anonymous |
டிசம்பர் 14, 2024

பிரதமர் ஹரிணி அமரசூரிய எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத உயர் புலமைப்பரிசில் மட்டுமே பெற்றுள்ளார் என்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுடன், சமூக ஊடக பயனர்களும் இது குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
ஆகவே குறித்து ஆராய்ந்ததில், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் லிங்க்ட்-இன் கணக்கில் அவரது கல்வித் தகைமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் எடின்பேர்க் பல்கலைக்கழகம் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் உறுதிப்படுத்தும் வகையில்,எடின்பேர்க் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அவதானித்ததில், ஹரிணி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக் குறிப்புகள் பதியப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது.
https://www.sps.ed.ac.uk/news-events/news/sps-graduate-appointed-prime-minister-sri-lanka
அத்துடன் குறித்த இணையதளத்தில், ஹரிணி அமரசூரிய அவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு சமூக மானுடவியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார் என்பது இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.iash.ed.ac.uk/news/former-fellow-becomes-prime-minister-sri-lanka
மேலும், அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் எடின்பேர்க் பல்கலைக்கழகத்தின் மனிதநேய உயர்கல்வி நிறுவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட கற்கையில் சேர்ந்துள்ளதுடன், சுமார் மூன்று மாதங்கள் அங்கு கல்வி கற்றுள்ளதாகவும், பின்னர் ஹரிணி அமரசூரிய தேசிய பட்டியலில் மூலமாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதோடு பல்கலைக்கழகத்தின் மனிதநேய உயர் கற்கைகள் நிறுவகத்தின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார்.
இது தவிர குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஹரினி அமரசூரிய தொடர்பான குறிப்பும் காணப்படுகின்றன.
எனவே, சமூக வலைதளங்களில் அவருக்கு முதுகலைப் பட்டம் இல்லை என்றும் அது 03 மாத பட்டம் என்றும் கூறுவது தவறானது என்றும் அவர் எடின்பேர்க் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி என்றும் FactSeeker இனால் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த முடிகின்றது.