ஹரிணி அமரசூரிய அநுரவை விமர்சித்தாரா?

கலாநிதி ஹரிணி அமரசூரிய கட்சியின் தலைவர் குறித்து கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவு உண்மைக்கு புறம்பானது
by Anonymous |
டிசம்பர் 18, 2023

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக தொடர்பில், “தலைவருக்கு ஆங்கில வார்த்தையே தெரியாது” “அவர் ஜனாதிபதி வேட்பாளராக அல்லது கட்சித் தலைமைக்கு தகுதியானவர் அல்ல” என்று கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயும் விதமாக, Factseeker கலாநிதி ஹரிணி அமரசூரியவின் சமூக வலைதள பக்கங்களையும், இது தொடர்பில் ஏதேனும் அறிக்கை உள்ளதா என்பது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கைகளையும் ஆராய்ந்து பார்த்ததில் அவ்வாறான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவிடமும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களிடமும் factseeker வினவியபோது. இது போலியான பதிவு என்றும், இவ்வாறான எந்தவொரு கருத்தையும் தாம் ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உறுதிப்படுத்தினார். அதேபோல் தேசிய மக்கள் சக்தியும் இந்த கருத்தை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முடிவு :
ஆகவே கலாநிதி ஹரிணி அமரசூரிய கட்சியின் தலைவர் குறித்து கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவு உண்மைக்கு புறம்பானது என்பதை Factseeker உறுதிப்படுத்துகின்றது.