ஹனுமானின் கதாயுதம் இலங்கையில் கிடைத்ததாக பரப்பப்படும் போலிச் செய்தி

இப் புகைப்படங்கள் 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இந்தூரில் நிறுவப்பட்ட கதாயுத சிலையின் புகைப்படங்கள்
by Anonymous |
ஆகஸ்ட் 29, 2024

“இலங்கையில் பூமியை தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள கதாயுதம் கிரேன் மூலம் டிரைலரில் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. இராமாயணம் வெறும் கதையல்ல.” என்ற பதிவுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சில X தளத்திலும் யூடியூப்பிலும் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்த போது, இப்புகைப்படங்கள் 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இந்தூரில் நிறுவப்பட்ட கதாயுத சிலையின் புகைப்படங்கள் என்பதை கண்டறிய முடிந்தது. இதை உறுதிப்படுத்தக்கூடிய காணொளி ஒன்றையும் அவதானிக்க முடிந்தது.
காணொளி: https://www.youtube.com/watch?v=7n9nXQy49AI
கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இப்புகைப்படங்கள் இதேபோன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பதை இந்தியாவின் சில தரவுகள் சரிப்பார்க்கும் தளங்களை ஆராய்ந்தபோது அறிய முடிந்தது.
ஆகவே “இலங்கையில் பூமியை தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள கதாயுதம்” என கூறும் புகைப்படங்கள் 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட சிலையின் புகைப்படங்கள் என்பதையும் இலங்கை எனக்கூறும் பதிவுகள் போலியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.