ஹட்டனில் பனிப்பொழிவு என தவறான புகைப்படங்கள் பகிரப்படுகின்றன
இலங்கையின் ஹட்டன் நகரில் பனிப்பொழிவு என பகிரப்படும் புகைப்படங்கள் தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
டிசம்பர் 22, 2023
இலங்கையின் ஹட்டன் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
முகநூல் பக்கங்களிலும், எக்ஸ் தளத்திலும், வட்சப்பிலும் குறித்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதுடன், இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையில் ஹட்டனில் எடுக்கப்பட்டதா என பலர் சமூக தளங்களிலே கேள்வியும் எழுப்பியுள்ளனர். அதேபோல் இதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து தருமாறு ஊடகவியலாளர்கள் சிலர் factseeker இடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆகவே இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது இலங்கையின் ஹட்டன் பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவு அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களை google reverse image search செய்து பார்த்ததில் இவை இந்தியாவில் பதிவான புகைப்படங்கள் என்பதை கண்டறிய முடிந்தது. குறிப்பாக இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என தெரிவிக்கப்படுகின்றன.
அதேபோல் சீனர் ஒருவர் ஹட்டன் பகுதியில் பனிப்பொழிவுக்கு நடுவில் குதுகலமாக இருக்கும் புகைப்படம் என பகிரப்படும் இந்த புகைப்படமும் இலங்கையில் எடுக்கப்பட்ட ஒன்றல்ல. இது 2020 ஆம் ஆண்டு கியோடோ நகரில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
அது குறித்த லிங்க் இங்கே : https://obubutea.com/tea-in-indonesia/
ஆகவே இலங்கையின் ஹட்டன் நகரில் பனிப்பொழிவு என பகிரப்படும் புகைப்படங்கள் தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.