ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக 'சிட்டி ஒப் ட்ரீம்ஸ் இலங்கை' அறிவித்துள்ளது.
by Anonymous |
ஜூலை 7, 2025

இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். கொழும்பில் ‘சிட்டி ஒப் ட்ரீம்ஸ் இலங்கை’ திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவே அவர் வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ‘சிட்டி ஒப் ட்ரீம்ஸ் இலங்கை’ வெளியிட்ட அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்பில் இருப்பதாக தெரிவிக்கும் ஒரு புகைப்படம் பகிரப்படுவதை FactSeekerஇனால் அவதானிக்க முடிந்தது. இந்த புகைப்படத்தின் அனிமேஷன் வீடியோவையும் FactSeeker கண்டறிந்தது.
ஷாருக்கான் பற்றிய மற்றொரு செய்தியை ஆராய்ந்த போது அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே புகைப்படமே இந்த செய்தியிலும் பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது.
விமர்சனத்திற்குரிய புகைப்படத்தில் உள்ள சில பதிவுகள்,செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த புகைப்படத்தை உன்னிப்பாக ஆராய்ந்தபோது, பெயர்ப்பலகைக்கு அருகிலுள்ள வீதி அடையாள பெயர்ப்பலகை சிதைந்திருப்பதைக் காண முடிந்தது. ** OF DREAMS ***MBOBO எனப் பெயரின் எழுத்துப்பிழை தவறானது என்பதையும், உண்மையான பெயர்ப்பலகை “CITY OF DREAMS SRI LANKA” என்றே எழுதப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிய முடிந்தது.
அதற்கமைய, ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.