வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதள பக்கங்களில் நேர், மறையான பல விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
by Anonymous |
ஜனவரி 26, 2026

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக அண்மையில் யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பகிரப்படும் புகைப்படத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தமிழர் கலாசார உடையில் உணவு உண்பதைப்போன்றும், நிகழ்வொன்றில் தமிழர் கலாசார ஆடையில் கலந்துகொண்டு பொங்கல் விழாவை கொண்டாடுவது போன்றும் உள்ளதால் அதற்கு நேர், மறையான பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுவதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் குறித்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்ததில் இது AI தொழிநுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை கண்டறிய முடிந்தது.

ஜனாதிபதியின் யாழ்ப்பான விஜயத்தின் போது அவர் எந்தவொரு நிகழ்விலும் தமிழர் கலாசார ஆடையில் பங்கேற்றிருக்கவில்லை. அவரது உத்தியோகபூர்வ சமூக வலைதள கணக்குகளிலோ அல்லது ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் ஊடகங்களுக்கு வழங்கும் புகைப்படங்களிலோ அவ்வாறான ஒரு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட எந்தவொரு புகைப்படமும் பதிவாகியிருக்கவில்லை.
புகைப்படத்தை அவதானிக்கையில், அதில் ஜனாதிபதியின் அங்க சாயல்களில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் இலகுவாக இதனை AI புகைப்படம் என கண்டறியக்கூடிய தன்மைகளும் காணப்படுகின்றன.
மேலும், AI புகைப்படங்களை கண்டறியக்கூடிய IMGDetector கருவி மூலமாக இதனை ஆராயந்ததிலும் இது AI மூலமாக உருவாக்கப்பட்டுள்ள புகைப்படம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.

எனவே ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் விஜயத்தில் அவர் தமிழர் கலாசார உடையில் உணவு உண்ணும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.