Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

வீடுகளுக்கு சென்று எயிட்ஸ் பரப்புவதாக வதந்தி பரவுகின்றது

False
False

அவ்வப்போது மக்களை எரிச்சலூட்டும் வகையில் இவ்வாறான பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதால், இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் தெரிவித்துள்ளது

by Anonymous |

மே 27, 2024

“இதைக் கேட்டு மக்களுக்கு பகிருங்கள்…” என்று தெரிவிக்கும் குரல் பதிவொன்று அண்மைய நாட்களாக வட்ஸ்-அப் கணக்குகளில் பகிரப்பட்டு வருவதுடன், இந்தக் குரல் பதிவில் தெரிவிக்கப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயுமாறு factseeker இற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் பொதுமக்களுக்கு இலவசமாக இரத்தம் பரிசோதிக்கப்படுவதாக கூறி வீடுகளுக்கு வருவதாகவும், அவ்வாறு இரத்தத்தை பரிசோதிப்பதாக கூறி எயிட்ஸ் நோயினை பரப்புவதாகவும், ஆகவே இவ்வாறான நபர்களை வீடுகளுக்கு அனுமதிக்காது பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்தே இந்த குரல் பதிவு பகிரப்படுகின்றது. குறித்த குரல் பதிவை பலர் தமது வட்ஸ்-அப் கணக்குகளில் அதிகளவில் பகிர்ந்தும் வருகின்றனர்.

இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என சுகாதார அமைச்சிடம் factseeker வினவிய போது, இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக எவ்வித முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதேபோன்று, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதா என பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் factseeker வினவியபோது, ​​அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அவ்வப்போது மக்களை எரிச்சலூட்டும் வகையில் இவ்வாறான பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதால், இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எனவே, மக்களை அச்சமூட்டும் விதத்தில் பகிரப்படும் இந்தக் குரல் பதிவானது போலியான தகவல்களை உள்ளடக்கிய ஒன்றென்பதை factseeker உறுதி செய்கின்றது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection