வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டன் ஸ்பெக்டேட்டர் செய்தித்தாளில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் ஸ்காட் கார்ட்னர், 1992 ஆம் ஆண்டு வாயில் கண்களைக் கொண்ட ஒரு தவளையின் இதேபோன்ற படத்தை பதிவு செய்துள்ளார்.
by Anonymous |
ஜூலை 21, 2025

“வாயில் கண்களைக் கொண்ட தவளை” என்ற தலைப்பில் பேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு பதிவை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. தவளையின் வாய்க்குள் அதனது கண்கள் இருப்பதாகவும், அறியவையான தவளை இனம் எனவும் இந்த பதிவு பகிரப்படுகின்றது.
அதேபோல், இந்த புகைப்படத்தின் கருத்துகள் பிரிவில் சிலர் இது ஒரு AI உருவாக்க புகைப்படமாக இருக்கலாம் எனவும் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்தக் கருத்துகளையும் புகைப்படத்தின் சந்தேகத்திற்கிடமான தன்மையையும் கருத்தில் கொண்டு, FactSeeker இதன் உண்மைகளைச் சரிபார்க்க நடவடிக்கை எடுத்தது.
“வாயில் கண்கள் தனித்துவமாக வளரக் காரணமான ஒரு அதிர்ச்சியூட்டும் மரபணு மாற்றத்துடன் கூடிய ஒரு அரிய தவளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்,” என்று புகைப்படம் தலைப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட விளக்கத்தின்படி, இது கனேடிய ஆராய்ச்சியாளர்கள் குழுவின் கண்டுபிடிப்பு எனவும், இந்த குணாம்சம் ஒரு பரிணாம தழுவலாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reverse Image Search மூலம் படத்தை ஆராய்ந்த போது, சமூக வலைதளங்கள் உட்பட பல வலைத்தளங்களில் இந்த புகைப்படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. அந்த பதிவுகளின் உள்ளடக்கம் மூலம் மேலும் ஆய்வு செய்ததில், இந்தப் படத்தின் முதல் இடுகைஇணைய FactSeeker இனால் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்தப் படத்துடன் தொடர்புடைய பின்னணியை FactSeeker ஆராய்ந்ததில். வாயில் கண்களைக் கொண்ட தவளையைப் பற்றி உலகத்திலிருந்து ஏதேனும் செய்திகள் வந்துள்ளனவா என்பதை நாங்கள் சோதித்தோம்.
மேலே உள்ள thetravel.com கட்டுரை உட்பட பல சமூக ஊடக இடுகைகளில் வெளியிடப்பட்ட, வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய அறிக்கைகளின் அசல் படங்கள் என்று உறுதிப்படுத்தக்கூடிய இரண்டு படங்களை கண்டறிய முடிந்தது.
படங்களைப் பற்றிய எங்கள் ஆய்வின் போது, பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான (Verified signatory of the IFCN Code of Principles) snopes.com நடத்திய உண்மைச் சரிபார்ப்பைக் கண்டறிந்தோம். இணைப்பு கீழே உள்ளது.
https://www.thetravel.com/photo-toad-with-eyes-in-mouth-found-in-canada/
அதில் குறிப்பிடப்பட்ட தகவலின்படி, கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டன் ஸ்பெக்டேட்டர் செய்தித்தாளில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் ஸ்காட் கார்ட்னர், 1992 ஆம் ஆண்டு வாயில் கண்களைக் கொண்ட ஒரு தவளையின் இதேபோன்ற படத்தை பதிவு செய்துள்ளார். கார்ட்னர் எடுத்த அசல் படம் அவ்வப்போது மற்ற படங்களுடன் பகிரப்பட்டு வருவதாக உண்மைச் சரிபார்ப்பு அமைப்பு தெரிவிக்கிறது.
2014 ஆம் ஆண்டு பிபிசி கார்ட்னரின் புகைப்படத்தைப் பற்றி எழுதியதாகவும், விசித்திரமான தோற்றமுடைய இந்த தவளை 1990 களின் முற்பகுதியில் கனடாவின் ஒன்டாரியோவில் இரண்டு இளம் பெண்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை விளக்கியதாகவும் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பு கூறுகிறது.
குறிப்பாக பரிணாம உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் 1996 ஆம் ஆண்டு “Climbing Mount Improbable” என்ற புத்தகத்தில் கார்ட்னரின் புகைப்படம் பல வெளியீடுகளில் வெளிவந்துள்ளது.
பிறழ்வுக்கான காரணம் தெளிவாக இல்லை, ஆனால் அது ஒரு ஒட்டுண்ணி தொற்று காரணமாக இருக்கலாம் என்று பிபிசி கட்டுரை கூறுகிறது. snopes.com உண்மைச் சரிபார்ப்பு அதை “பெரும்பாலும் உண்மை” என்று வகைப்படுத்தியுள்ளது.
ஸ்காட் கார்ட்னரின் அசல் புகைப்படம் என்று நம்பப்படும் புகைப்படத்தை உள்ளடக்கிய பழைய பதிவுகள் கீழே உள்ளன.
இதற்கிடையில், thetravel.com வலைத்தளம் தவளைக்கும் தேரைக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டும் ஒரு சிறப்புக் குறிப்பைக் கொண்டிருந்தது.
“சிலர் புகைப்படத்தில் உள்ள விலங்கை தவளை என்று அழைக்கிறார்கள், ஆனால் அது உண்மையில் ஒரு தேரை. தவளைகளும் தேரைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை, ஆனால் இரண்டிற்கும் இடையே நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. கால் நீளம், தோல் அமைப்பு, வாழ்விடம் மற்றும் குரல் எழுப்பும் விதம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் இதில் அடங்கும் என்பதை factseeker விளக்குகின்றது.