வானிலை திணைக்களத்தின் அறிவிப்புகளும் அரசியல் விமர்சனங்களும்

நவம்பர் மாதம் 24 ஆம் திகதி, சீனாவின் FY-4B செயற்கைக்கோள் எடுத்த வங்காள விரிகுடா கடல் பகுதியின் புகைப்படத்தை வானிலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்ததுடன், இந்த வானிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது
by Anonymous |
டிசம்பர் 10, 2025

இலங்கை வானிலைத் திணைக்களத்தின் முறையான அறிவிப்புகளைப் பின்பற்றி மக்களை தெளிவுபடுத்தியிருந்தால் தற்போது ஏற்பட்ட பேரிடரில் உயிரிழப்புகளையும், சேதங்களையும் கணிசமாக குறைத்திருக்க முடியும் என பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அரசாங்கம் அதனை முழுமையாக நிராகரித்திருந்தது.
அனர்த்தம் ஏற்பட்ட தினத்தில் இருந்தே சமூக வலைதளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் இது பிரதான பேசுபொருளாக மாற்றம்பெற்று இருந்ததனால் இதன் உண்மைத்தன்மையை ஆராய factseeker தீர்மானித்தது.
அதற்கமைய இது குறித்து ஆராய்ந்ததில் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கருத்துகளில் factseeker கவனம் செலுத்தியது.
இதன்போது நாடாளுமன்றத்தில் அவர் கூறியதானது,
“வானிலைத் திணைக்களத்தின் அறிவிப்புகளை கருத்திற்கொள்ளாது புறக்கணித்தமையினாலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பேரிடரை சமாளிக்க முடியாமல் போனது, வானிலைத் திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி ஏற்படவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்து நவம்பர் மாதம் 11 ஆம் திகதியே தெளிவுபடுத்தியிருந்தார். இதன்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையினால் நாட்டில் கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தார். ”
மேலும், நவம்பர் 12,14,17,21,22 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.
link :- https://www.youtube.com/live/Z4h3vmW6eNE?t=7491s
இது குறித்து அன்றைய தினமே நாடாளுமன்ற அமர்வுகளில் கருத்து தெரிவித்திருந்த கபீர் ஹசிம் எம்.பி கூறுகையில், உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை அரசாங்கம் எடுத்திருந்தால் இந்த பேரிடரில் இழப்புகளை நாம் குறைத்திருக்க முடியும். இது குறித்த கலந்துரையாடல்கள் 11 ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
link :- https://www.youtube.com/live/Z4h3vmW6eNE?si=BhfntzmIEUW_CVA-&t=3375
எனினும் எதிர்க்கட்சியினரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் தெரிவித்திருந்த அமைச்சர் அனில் ஜயந்த : அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டுக்கள் தவறானவை என சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பாக ” சாதாரண மழைக் காலநிலை அறிவிப்புகளை உரிய நிறுவனங்கள் விடுத்திருந்த போதிலும் இவ்வாறான புயல் ஒன்று வரக்கூடிய நிலைமை காணப்படுவதாக அரசாங்கத்திற்கோ அல்லது உரிய நிறுவனங்களுக்கோ அறிவிக்கப்படவில்லை” என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
link :- https://www.youtube.com/live/Z4h3vmW6eNE?si=ie0IzbAume5yCO4g&t=4238
இந்நிலையில் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பொன்றை விடுத்திருந்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயசிங்க – ” வானிலைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதத்திற்கும் வெளியிட்ட அறிவிப்புகளில் எந்தவொரு இடத்திலும் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுக்கவில்லை” என தெரிவித்தார்.
link :- https://youtu.be/5z1wJXdP9gA?si=OeA0yJoDtUpi8SqB
ஆகவே, இலங்கை வானிலைத் திணைக்களம் இவ்வாறான அச்சுறுத்தலை விடுத்துள்ளதா என factseeker ஆராய்ந்து பார்த்தது,
அதற்கமைய, எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்ததற்கு அமைய கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ‘தெரண’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வில் வானிலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக தெரிவித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதில் அவர் கூறுகையில், ” வங்காள விரிகுடாவில் கீழ் வளிமண்டலத்தில் சுழற்சி நிலைமையொன்று உருவாகியுள்ளது, தற்போது இது பலமடைந்துள்ளது. ஆனால் இது எந்தப்பக்கம் நகரும் என எம்மால் இப்போது கூற முடியாது. எனினும் 14 ஆம் திகதிக்கு பின்னர் இப்போது இருக்கும் காலநிலையில் மாற்றமொன்று ஏற்படும். எனது அனுபவத்திற்கு அமைய கூறுகின்றேன், இந்த காலநிலையானது மறைமுகமாக என்றாலும் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இப்போது இருக்கும் நிலைமையில் எதிர்வரும் சில நாட்களில் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். எவ்வாறு இருப்பினும் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம்” என அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
link : https: //www.youtube.com/live/WJgLftkD43A?si=IGsp6JrTKT7HZ_ZE&t=1922
இந்த நிகழ்ச்சிக்கு பின்னரான தினங்களில் வானிலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் factseeker ஆராய்ந்து பார்த்தது,
Nov 14th – https://www.facebook.com/share/p/1EbbncVZWy/
Nov 17th –https://www.facebook.com/share/p/1ETTKcPzHi/
Nov 21st – https://www.facebook.com/share/p/1AFXmpfMdv/
Nov 22nd – https://www.facebook.com/share/p/16q3bw7QTE/
https: //www.facebook.com/share/p/17gmJEHwfQ/
https: //www.facebook.com/share/p/17YTmsijRx/
Nov 24th – https://www.facebook.com/share/p/17VaSejPX8/
https: //www.facebook.com/share/p/1GsRsTEw8y/
இந்த அறிவிப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தியதில், கடந்த நவம்பர் 14 ஆம் திகதி முதல் வங்காள விரிகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த காலநிலை உருவாகும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் நவம்பர் 18ஆம் திகதி பிற்பகல் வானிலைத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிவிப்பில் ” நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் படிப்படியாக நாட்டை விட்டு விலகிச் சென்று கொண்டு இருக்கின்றது. எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளையும் (19ஆம் திகதி) நாளை மறு தினமும் தற்காலிகமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் அன்றைய தினம் (நவம்பர் மாதம் 18ஆம் திகதி), இரவு 8 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் குறைந்த காற்றழுத்தப் பகுதியில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று வானிலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே கடந்த நவம்பர் 14ஆம் திகதியில் இருந்து 22ஆம் திகதி வரையில் வானிலைத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிவிப்புகளில் மாறுபட்ட விதத்திலான அவதானிப்புகளே காணப்படுகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் காலநிலை மோசமாக மாற்றம் பெறுகின்றது என எச்சரிக்கப்பட்டுள்ள அதே வேளையில் சில சந்தர்ப்பங்களில் நிலைமைகள் சுமூகமாக உள்ளதாகவும், அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகவும் வானிலைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி, சீனாவின் FY-4B செயற்கைக்கோள் எடுத்த வங்காள விரிகுடா கடல் பகுதியின் புகைப்படத்தை வானிலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்ததுடன், இந்த வானிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

” (A) என காட்டப்பட்டுள்ளபடி, இன்று (24) நிலவரப்படி இலங்கையின் மேல் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத்தில் கொந்தளிப்பான நிலையின் பகுதி இங்கே. இந்த கொந்தளிப்பான நிலை அவ்வப்போது இலங்கையின் வானிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இலங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடுத்தர மேக அடுக்குகள் மற்றும் கீழ் மேகங்கள் கணிசமாக உருவாகி வருகின்றன. இடி மற்றும் மின்னலை ஏற்படுத்தும் ஒடுக்க மேகங்கள் அவற்றில் முக்கியமானவை. இந்த மேக வளர்ச்சி காரணமாக, அடுத்த சில நாட்களில் (நவம்பர் 25 முதல் 28 வரை) மாலை, இரவு அல்லது அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த கொந்தளிப்பான நிலை நாளை (25) க்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மேலும் வளர்ச்சியடையும் போது, அதனுடன் தொடர்புடைய எதிர் சூறாவளி அடுத்த சில நாட்களில் இலங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கடல் பகுதிகளை பாதிக்கும். எனவே, அடுத்த சில நாட்களில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அமைப்பின் தாக்கம் நவம்பர் 29 முதல் இலங்கையில் படிப்படியாகக் குறையும். தீவைச் சுற்றியுள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பாக வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் வரவிருக்கும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துவது முக்கியம்.
தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி (B) எனக் காட்டப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயல்படும் மீன்பிடி படகுகள் மற்றும் கடல் சமூகத்திற்கு வானிலை ஆய்வுத் துறை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு இலங்கையில் வானிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு அந்தமான் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது. பின்னர் அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்காள விரிகுடாவில் இந்த அமைப்பு மேலும் ஒரு சூறாவளி புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.”
link : https://www.facebook.com/share/p/1JCLXfXzD8/
Nov 26 – https://www.facebook.com/share/p/1CBUDQHS59/
ஆகவே இலங்கையின் வானிலை மோசமான நிலைமைக்கு மாறும் என்பதை கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதியில் இருந்து 25 ஆம், 26 ஆம் திகதிகள் வரையில் வானிலைத் திணைக்களத்தினால் நேரடியாகவும், அறிக்கைகள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 25ஆம் திகதி வானிலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது ” வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சூறாவளி அடுத்த சில நாட்களில் இலங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கடல் பகுதிகளை பாதிக்கும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://link : https://www.dmc.gov.lk/images/dmcreports/Warning_for_Heavy_Rain_at_15__1764066573.pdf
மேலும் நவம்பர் 26ஆம் திகதி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கை அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்ததுடன், குறிப்பாக மத்திய மலைநாட்டில் சகல பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
link : – https://www.dmc.gov.lk/images/dmcreports/Landslide_EW_Report_at_2130hrs_on_2025__1764174295.pdf
link ; – https://www.dmc.gov.lk/images/dmcreports/Landslide_Ew_Report_at_2300hrs_on_2025__1764269006.pdf
link : https://www.dmc.gov.lk/images/dmcreports/LEWM_29-11-2025_16_00__1764415674.pdf
எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுவதைப்போன்று நவம்பர் 11 ஆம் திகதியே நாட்டிற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது தவறான கருத்தாகும்.
நவம்பர் மாதம் 12ஆம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 18ஆம் திகதி வரையில் வானிலைத் திணைக்களத்தினால் நேரடியாக எந்தவொரு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை.
அவ்வப்போது அறிவுறுத்தல்கள் விடப்பட்ட போதிலும் மீண்டும் வானிலை நிலைமை மாற்றம் பெற்றுள்ளதாகவும், குறிப்பாக வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இலங்கையை விட்டு நகர்ந்து செல்வதாகவும், அழுத்தம் குறைந்துள்ளதாகவும் அவர்கள் அறிக்கைகளை விடுத்துள்ளனர்.

அதேபோல் 18ஆம் திகதி இரவு 8 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் குறைந்த காற்றழுத்தப் பகுதியில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று வானிலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
இதன் பின்னர் தொடர்ச்சியாக சில எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் தாழமுக்கம் சூறாவளியாக மாறுவதான எந்த எச்சரிக்கையும் அந்த அறிவிப்புகளில் விடுக்கப்படவில்லை.
எனினும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி, சீனாவின் FY-4B செயற்கைக்கோள் எடுத்த வங்காள விரிகுடா கடல் பகுதியின் புகைப்படத்தை வானிலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்ததுடன், இந்த வானிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறிய ” வானிலைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதத்திற்கும் வெளியிட்ட அறிவிப்புகளில் எந்தவொரு இடத்திலும் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுக்கவில்லை” என்ற கூறும் தவறானது.
வானிலைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு பின்னர் சில முன்னாயத்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததுடன், 150 மில்லிமீட்டருக்கு அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல் சீனாவின் செயற்கு கோல் புகைப்படங்கள் மற்றும் BBC சர்வதேச செய்திச்சேவையின் எச்சரிக்கைகள் என்பனவும் இலங்கையில் மிக மோசமான வானிலை மாற்றமொன்று ஏற்படுவதை எச்சரித்திருந்ததையும் கருத்தில்கொள்ள வேண்டும்.