வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டிழுப்பு முறையின்படி, 4 எண்களைப் பொருத்துவதன் மூலம் வெல்லப்படும் பரிசுத் தொகை ரூ.2 மில்லியன் என்பது உண்மையே.
by Anonymous |
ஜூலை 8, 2025

“சூர வீர கொல்லோ ” என்ற பேஸ்புக் பக்கத்தை நடத்தி வரும் வரங்கனா கெகுலாவல, லொத்தர் பரிசொன்றை வென்றுள்ளதாக அவரது புகைப்படத்துடனான செய்தியொன்று சமீபத்திய நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அவ்வாறு பகிரப்படும் பதிவின் கருத்துப்பதிவுகளில் இப்புகைப்படம் மற்றும் செய்தியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதால், factseeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தது.
வரங்கனா கெகுலாவல தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் அத்தகைய புகைப்படத்தை வெளியிட்டாரா என்பதை சரிபார்த்ததில், அதில் பின்வரும் பதிவை காணக்கிடைத்தது.
தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொத்தர் முடிவுகளின் பின்னணியில் அவர் தனது வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை வைத்திருப்பதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
இந்த ஒளிபரப்பு முடிவுகளை ஆராய்ந்ததில் அவருக்குப் பின்னால் திரையில் காட்டப்பட்ட வெற்றி எண்கள் சரியானவை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும்,லொத்தர் முடிவு ஒளிபரப்பின் தொகுப்பாளரான சமன் பண்டாராவும் குறித்த பதிவின் கருத்துகள் பிரிவில் அவரை வாழ்த்தி பதிவொன்றையும் இட்டுள்ளார்.
மேலும், லொத்தர் விற்பனை முகவருடன் அவர் எடுத்துக்கொண்ட வீடியோ காணொளியொன்றும் அவர் தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.வீடியோவின் இறுதியில்,அபிவிருத்தி லொத்தர் சபையின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,அவர் சூப்பர் பரிசை வெற்றிபெறாவிட்டாலும், ரூ.2 மில்லியன் பணப்பரிசை வென்றுள்ளார்.அதில் சேர்க்கப்பட்டுள்ள விற்பனை முகவரின் பெயர் முடிவுகள் ஒளிபரப்பின் போது காட்டப்பட்ட பெயர் என்பதை காட்சிகள் மூலம் உறுதி செய்ய முடிந்தது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டிழுப்பு முறையின்படி, 4 எண்களைப் பொருத்துவதன் மூலம் வெல்லப்படும் பரிசுத் தொகை ரூ.2 மில்லியன் அல்லது 20 இலட்சம் என்பதை விசாரணையில் உறுதிப்படுத்த முடிந்தது. அங்கு,இந்த லொத்தர் சீட்டிழுப்புக்கு வெற்றி எண்களை வரிசையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
அபிவிருத்தி லொத்தர் சபையின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை சரிபார்க்கும் போது, வரங்கனா கெகுலாவல தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) அவரை வாழ்த்தியுள்ளது என்பதையும் FactSeeker அவதானித்தது.
எனவே, வாரங்கனா கெகுலாவல லொத்தர் ஒன்றை வென்றதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையானது எனவும், அந்த சீட்டிழுப்பில் அவர் ரூ.2 மில்லியனை வென்றவர் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.