யால தேசிய பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வென பகிரப்படும் AI காணொளி

அக்காணொளியை Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில் இது "AI காணொளி" என்பது தெரியவந்தது.
by Anonymous |
பிப்ரவரி 26, 2025

யால தேசிய பூங்காவில் யானை ஒன்று புலிக்குட்டியை தூக்கிச் செல்வது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
🔗 https://www.facebook.com/watch/?v=9339567692804883&rdid=rhaA9yCjXMCDeXsS
🔗 https://www.facebook.com/share/v/1DWxP935kW/?mibextid=wwXIfr
சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அக் காணொளியை உன்னித்து அவதானித்தில் சில தெளிவற்ற அம்சங்களை அவதானிக்க முடிந்தது.
உதாரணமாக, இக் காணொளியில் உள்ள யானை மற்றும் புலிக்குட்டியின் தெளிவற்ற சில அசைவுகளையும் அம்மிருகங்களின் உறுப்புக்கள் தெளிவற்றதாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை யூகிக்க முடிந்தது.
மேலும் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளியா என்பதை உறுதிப்படுத்த, Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில் இது “AI காணொளி” என்பது தெரியவந்தது.
ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற “யால தேசிய பூங்காவில் யானை ஒன்று புலிக்குட்டியை தூக்கிச் செல்வது போன்ற காணொளி” செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது