Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

False
False

மிஸ்டர் பீன் (Mr. Bean) என அழைக்கப்படுகின்ற ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson) தற்போது சினிமா துறையில் செயற்திறனுடன் ஈடுபட்டு வருகிறார்.

by Anonymous |

மே 29, 2025

மக்களை நகைக்கவைக்கும் உலகப்புகழ் பெற்ற பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் (Mr. Bean) என அழைக்கப்படுகின்ற ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson), உயிரிழந்ததாகவும்,அவரது இறுதிக்கிரிகைகள் நடைபெறுவதாகவும் கூறும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

“சிரிப்பவன் மனிதன், சிரிக்கவைப்பவன் மாமனிதன் – இன்று மண்ணோடு Mr. Bean” எனும் பதிவுடன் அக் காணொளியை பலர் தங்களின் இரங்கலுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து, இத் தகவலின் உண்மை தன்மை குறித்து FactSeeker ஆராய்ந்தது.

இது தொடர்பாக FactSeeker ஆராய்ந்த போது, Rowan Atkinson உயிரிழந்ததாக எந்தவொரு ஊடகங்களாலும் உத்தியோகப்பூர்வமாக செய்திகள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. மேலும், Mr. Bean பெயரில் இயங்கும் உத்தியோகப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் இந்த செய்தி தொடர்பான எந்தவொரு பதிவும் காணப்படவில்லை.

அத்துடன், அவரது இறுதிக்கிரிகைகள் நடைபெறுவதாக பகிரப்படும் அக் காணொளியை Google Lens மூலம் ஆராய்ந்ததில், அக் காணொளி 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி கீத் பால்மர் (Keith Palmer) அவர்களின் இறுதிக்கிரியையின் காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், ரோவான் அட்கின்சன் தற்போது சினிமா துறையில் செயற்திறனுடன் ஈடுபட்டு வருகிறார் என்பதை அறிய முடிந்தது. Mr. Bean: The Animated Series-இன் நான்காவது பாகம் 2025 மே 1-ஆம் திகதி வெளியாகியுள்ளது. இதில் Mr. Bean கதாப்பாத்திரத்திற்கு ரோவான் அட்கின்சன் குரல் கொடுத்துளார்.

இதனைத் தொடர்ந்து, Man vs Bee தொடரின் தொடர்ச்சியாக Man vs Baby என்ற நகைச்சுவை தொடரில் நடித்து வருகிறார். மேலும், Johnny English திரைப்படத் தொடரின் அடுத்த பாகமான Johnny English 4-இல் அட்கின்சன் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, இது 2025-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • https://www.thesun.co.uk/tv/32336988/rowan-atkinson-to-reprise-tv-role-in-new-series/?utm_source=chatgpt.com
  • https://www.reddit.com/r/JamesBond/comments/1as5s5c/if_rowan_atkinsons_4th_johnny_english_indeed/

ஆகவே, Mr. Bean என அழைக்கப்படுகின்ற ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson), உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளி தவறானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

#FAKE

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

#FAKE

TEMU இலவசமாக மின்னணு சாதனங்களை வழங்குவதாக பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 20, 2025

#FAKE

திமிங்கலத்தின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் AI காணொளி

ஜூன் 20, 2025

Related Content

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 21, 2025

ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என பகிரப்படும் போலிச்செய்தி

மே 19, 2025

வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection