மியன்மர் நிலநடுக்க இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட குழந்தை என பகிரப்படும் AI காணொளி

அக் காணொளியை ஆராய்ந்ததில், சில தெளிவற்ற அம்சங்கள் பதிவாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
by Anonymous |
ஏப்ரல் 2, 2025

மியன்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை (28) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் சமூகவலைதளங்களில் பல்வேறு காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மியன்மர் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே காயமடைந்த ஒரு குழந்தை சிக்கிக்கொண்டிருப்பது போன்ற காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
https://www.instagram.com/vijayakumar5735/reel/DHIH1ImKxtT/
https://www.facebook.com/share/v/1BUHMKg6Fu/
அக் காணொளியை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில், இது சர்வதேச அளவில் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இருப்பினும் இது குறித்த எந்தவொரு உத்தியோகபூர்வ செய்திகளும் வெளியாகவில்லை.
மேலும், அக் காணொளியை ஆராய்ந்ததில், சில தெளிவற்ற அம்சங்கள் பதிவாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள குழந்தையின் அசைவுகள் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் முகங்கள் ஆகியவை தெளிவற்றதாக காணப்படுகின்றன. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிந்தது.
மேலும், இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில், இது ‘AI காணொளி‘ என்பது தெரியவந்தது.
ஆகவே, சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற இக் காணொளி, செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.