மரம் விழுந்ததில் காயமடைந்த யானையொன்றை மீட்டதாக பகிரப்பட்டு காணொளி AI ஆகும்

இக்காணொளியை Google Ditected AI மூலம் ஆராய்ந்ததில், இது 'AI காணொளி' என்பது தெரியவந்தது.
by Anonymous |
ஏப்ரல் 10, 2025

சமீப நாட்களாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்படுகின்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.அவை மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளன.
இந்நிலையில், யானை ஒன்றின் மீது மரமொன்று வீழ்ந்ததில் காயப்பட்டுக்கிடக்கும் யானையை மீட்டதாக பகிரப்படும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. அதற்கு பலர் தமது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
அக் காணொளியை ஆராய்ந்ததில், சில தெளிவற்ற அம்சங்கள் பதிவாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள யானை ஐந்து கால்களுடன் இருப்பதைப்போன்று பதிவாகியுள்ளன நிலையில் அங்குள்ள மனிதர்களின் முகங்கள் மற்றும் அசைவுகள் அசாதாரணமாக காணப்படுகின்றன. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிந்தது.
மேலும், இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Google Ditected AI மூலம் ஆராய்ந்ததில், இது ‘AI காணொளி’ என்பது தெரியவந்தது.
ஆகவே, மரம் விழுந்ததில் காயமடைந்த யானையொன்றை மீட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது