மனோரி மல்லவ ஆரச்சி பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்?

பிரபல இசையமைப்பாளரான நதீக குருகேவின் மனைவி மனோரி மல்லவ ஆரச்சி, இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராக இருப்பதனாலே பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டார்
by Anonymous |
அக்டோபர் 28, 2024

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான நதீக குருகேவின் மனைவி மனோரி மல்லவ ஆரச்சி இவ்வருட பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டமை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு பகிரப்பட்ட சில பதிவுகள் கீழே உள்ளன :
• https://www.facebook.com/share/p/uxTQXqX9xFg7Y1JE/
•https://www.facebook.com/share/p/13BhbfEtLqhhS4
கடந்த 22ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
அவர் “இந்த நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சர்கள் இருப்பதாலும் தேர்தல் காலம் காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ அல்லது அமைச்சர்களோ பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க முடியாத காரணத்தாலும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்” என தெரிவித்திருந்தார்.
மேலும், மனோரி மல்லவ ஆரச்சி இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராக இரண்டு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதையும் அதற்கு முன்னர் அவர் இருபது வருடங்களுக்கு மேலாக இராஜதந்திர முகவராக கடமையாற்றியதையும் அறிய முடிந்தது. அவரின் LinkedIn கணக்கிலும் அவரது தொழில்சார் தகவல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
https://www.linkedin.com/in/manorie-mallikaratchy-9934361a/
ஆகவே,பிரபல இசையமைப்பாளரான நதீக குருகேவின் மனைவி மனோரி மல்லவ ஆரச்சி, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராக இருப்பதனாலே பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டார் என்பதை Factseeker உறுதிப்படுத்துகிறது.