பொதுமக்கள் சகலருக்கும் அரசாங்க கொடுப்பனவென பகிரப்படும் போலிச்செய்தி

இவ்வாறான இணைப்புகளில் பொதுமக்கள் தங்களின் தகவல்களை வழங்க வேண்டாம் என factseeker வலியுறுத்துகின்றது.
by Anonymous |
டிசம்பர் 16, 2024

பொதுமக்கள் சகலருக்கும் அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்குவதாக அரசாங்க இலச்சினையுடன் கூடிய செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது.
இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு factseekerஇற்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இது குறித்து ஆராயப்பட்டது.
இவ்வாறு பகிரப்படும் செய்தியில், ‘ஒவ்வொரு வீட்டிற்கும் 50 000 ரூபா உதவித் தொகை வழங்குவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அந்தத் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு ஒரு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த இணைப்பை அணுகும்போது பின்வரும் உள்நுழைவு காட்டப்பட்டது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபாய் அரச உதவி வழங்கப்படும் என்று இன்னொரு பதிவும் பகிரப்படுகின்றது. அந்த பதிவிலும், இணைப்பு ஒன்று வழங்கப்பட்டு அதனை அணுகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிரப்படும் செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் factseeker வினவிய போது, இந்த பிரசுரங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை அவர்களிடம் இருந்து உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த செய்திகள் தவறானவை என்பதை FactSeeker உறுதி செய்வதுடன், இவ்வாறான இணைப்புகளில் பொதுமக்கள் தங்களின் தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றது.

 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            