பிரேசில் விமானம் தீப்பற்றியதாக பகிரப்படுவது அனிமேஷன் வீடியோவாகும்
தீ பற்றி எரிந்ததாக பகிரப்படும் காணொளி Animation காணொளி என்பதையும் இது பார்வையாளர்களை தவறாக வழிநடத்துகிறது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.
by Anonymous |
அக்டோபர் 10, 2024
பிரேசிலை சேர்ந்த Azul Airlines விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கும் போதே தீ பற்றி எரிந்ததாக காணொளி ஒன்று சமுக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு பகிரப்பட்ட காணொளி : https://www.facebook.com/share/v/LgNb7Ho8MPZRXGva/
இது குறித்து ஆராய்ந்து பார்க்கையில் இது ‘வீடியோ கேம்’ இற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக தென்பட்டதுடன், இவ்வாறான பல்வேறு காணொளிகள் யூடியுப் மற்றும் ஏனைய தளங்களில் பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது.
இது குறித்து Zincat நிறுவனத்தின் மென்பொருள் பொறியலாளர் (software engineer) டி சந்தருவானிடம் factseeker வினவிய போது, இது போன்ற காணொளிகளை Microsoft Flight Simulator 2020 என்ற மென்பொருளின் மூலமாக உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் Grand Theif Auto (GTA) V எனப்படும் பிரபல வீடியோ கேமில் இதுபோன்ற காட்சிகள் அதிகம் உள்ளதாகவும், இந்த காணொளியும் GTA V இன் உள்ளடக்கத்தை அப்படியே பின்பற்றி இருப்பதாகவும் கூறினார்.
Microsoft Flight Simulator 2020 மென்பொருளில் Golden Membership பெற்றவர்களால் அந்த விமானக் காட்சிகளை வேறு ஏதேனும் பின்னணிக் காட்சிகளுடன் கலந்து திரிபுப்படுத்தி உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, பிரேசிலை சேர்ந்த Azul Airlines விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கும் பொது தீ பற்றி எரிந்ததாக பகிரப்படும் காணொளி Animation காணொளி என்பதையும் இது பார்வையாளர்களை தவறாக வழிநடத்துகிறது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.