பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.சானக மூலமாக தவறாக சமூக மயப்படுதப்படும் கருத்து

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என பிரதமரினால் சட்டம் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
by Anonymous |
மார்ச் 17, 2025

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரண்வல, ஹேனகம மத்திய மகா வித்தியாலயத்தின் விழாவில் கலந்து கொண்டது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரதமர் அப்போது பிறப்பித்த சட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளதா அல்லது எதிர்கட்சிகளுக்கு மட்டுமா இந்த சட்டம் நடைமுரைப்படுத்தப்படுத்தப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக கேள்வி எழுப்பியிருந்தார். இதனை மறுத்திருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய தாம் இது குறித்து சட்டம் எதனையும் கொண்டுவரவில்லை எனவும், ஊடகங்கள் தவறாக செய்திகளை பிரசுரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இதற்கு முன்பு பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுபோன்ற கருத்து வெளியிட்டுள்ளாரா என்பதை FactSeeker ஆராய்ந்ததில், இது குறித்து அவர் முன்பு கருத்து தெரிவித்திருந்த காணொளி ஒன்றை கண்டறிய முடிந்தது.
https://www.facebook.com/watch/?v=1973110526469774&rdid=HvK0e5iJwvpzvCvn
அந்தக் காணொளியில், “அவசியமில்லாமல் அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம்” என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் ஆராய்ந்த போது, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்தியொன்றை அவதானிக்க முடிந்தது. அச் செய்தியில், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைத்து வருவதை நிறுத்துமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.

ஆகவே பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என பிரதமரினால் சட்டம் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதையும், பாராளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக தவறுதலாக இதனை சமூகமயப்படுத்த முயற்சித்தார் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.
 
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                                     
                                                                                                                             
                                                                                                                            