பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் மாவட்ட தலைவர்களை ஐ.தே.க நியமித்துள்ளதா?
பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்க மாவட்ட தலைவர்களை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கடிதம் போலியான கடிதம்
by Anonymous |
ஜூலை 21, 2022
பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி தேர்தலுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் செயற்பாடுகளுக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள்” என்ற தலைப்பில் 22 மாவட்டங்களின் பெயர் பட்டியலுடன் கூடிய கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய நாம் மேற்கொண்ட ஆய்வில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பதிவு போலியானது என்பது தெரியவந்தது.
சமூக ஊடகங்களில் பரவிவரும் கடிதம் போலியான கடிதம் என ஐக்கிய தேசியக் கட்சி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்க மாவட்ட தலைவர்களை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கடிதம் போலியான கடிதம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுத்துகிறது.