பாக் நீரிணையில் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் AI காணொளிகள்
இக்காணொளிகளை Is it AI மற்றும் Sightengine ஆகிய தளங்கள் மூலம் ஆராய்ந்ததில், இவை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
டிசம்பர் 26, 2024
ஓசோன் படலத்தின் வீழ்ச்சியால் கடந்த சில நாட்களாக பாக்கு நீரினை கடற்பரப்பில் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பல காணொளிகள் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
கடலுக்கு அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இக்காணொளிகள் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
ஓசோன் படலத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தோன்றியுள்ளதா என இணையதளங்களை ஆராய்ந்ததில், இது குறித்த நம்பகத்தன்மையான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இக் காணொளிகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Is it AI மற்றும் Sightengine ஆகிய தளங்கள் மூலம் ஆராய்ந்ததில், இவை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, ஓசோன் படலத்தின் வீழ்ச்சியால் பாக்கு நீரினை கடற்பரப்பில் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளிகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.