பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான காணொளியே இப்போது பகிரப்படுகின்றது
இஸ்ரேல் -பாலஸ்தீன போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் அங்கு இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் குறித்து பல்வேறு செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
by Anonymous |
அக்டோபர் 10, 2023
இந்நிலையில் ஹமாஸ் இயக்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டதாகக் கூறும் காணொளியொன்று ட்விட்டர், முகப்புத்தக பக்கங்களில் பகிரப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
இந்தக் காணொளியில் “ஹமாஸின் செய்தித் தொடர்பாளர்: ‘எங்களுக்கு ஆயுதங்கள், பணம் மற்றும் பிற உபகரணங்களை வழங்கிய ஈரானுக்கு நன்றி. அவர்கள் எங்களுக்கு சியோனிச கோட்டைகளை அழிக்க ஏவுகணைகளை வழங்கினர், மேலும் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவினார்கள்’ பைடன் ஈரானுக்கு வழங்கிய 6 பில்லியன் டொலர்கள் நன்றாக செலவழிக்கப்படுவது போல் தெரிகிறது” என தெரிவிக்கும் பதிவுடன் பகிரப்படும் காணொளியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்ததில்,
இந்த காணொளியானது பல ஆண்டுகளுக்கு முன்னரே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இந்தக் காணொளியை கூகுள் ரிவர்ஸ் (google reverse image search ) செய்து பார்த்ததில் கடந்த 2017ஆம் ஆண்டிலும், 2018ஆம் ஆண்டிலும் இதே காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு கடந்த 2018ஆம் ஆண்டில் youtube பக்கத்தில் பகிரப்பட்ட காணொளி இங்கே, https://www.youtube.com/watch?v=c40mv5lbPiE
முடிவு
ஆகவே தற்போது இடம்பெற்றுவரும் இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் காலகட்டத்தில் பதிவாகிய காணொளியென சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியானது பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காணொளி என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.