பராக் ஒபாமா உயிரிழந்துவிட்டதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு தெரிவான ஒபாமாவிற்கு தற்போது 62 வயதாகின்றது
by Anonymous |
ஆகஸ்ட் 18, 2023
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (பராக் உசைன் ஒபாமா) உயிரிழந்துவிட்டதாகவும், இதனால் அவரது குடும்பம் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அவரது புகைப்படத்துடன் செய்தியொன்று முகநூல் கணக்கொன்றில் பகிரப்பட்டு வருகின்றமையை factseeker அவதானித்தது. எனினும் இவ்வாறு பகிரப்படும் செய்தியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
அவர் அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு தெரிவானதுடன், தற்போது அவருக்கு 62 வயதாகின்றது. இப்போதும் அவர் அமெரிக்காவின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.