பத்து வருடங்களுக்கு மேல் பாராளுமன்ற அனுபவத்துடன், தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள்
1977 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களின் போதும பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சேவையாற்றிய உறுப்பினர்களின் தமது பாராளுமன்ற சேவைக்காலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது
by Anonymous |
ஏப்ரல் 30, 2024
இலங்கைப் பாராளுமன்றமானது, அரசியலமைப்பின் கீழ் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் குடியரசின் ஓர் அங்கமாகும்.
அத்துடன், பாராளுமன்றமே அரசின் முதனிலைச் சட்டவாக்க அம்சமாகவும் விளங்குகின்றது. ஆகவே, அது பெருமளவிலான தனிச் சிறப்பான கருமங்களையும், அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
அதன் முதலாவது கருமப்பாடு, மக்களின் ஜனநாயக மக்கள் பேரவை என்ற வகையில், அவர்களின் பல்வகைமையான கருத்துக்கள் குறித்துச் சிந்திப்பதும், அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்துவதும், அரசாங்கம் மக்களுக்கு நன்கு சேவையாற்றுவதை உறுதி செய்வதுமாகும்.
அத்துடன் அதன் பிரதான அரசியலமைப்பு அதிகாரங்களாக, நிறைவேற்றுத்துறையை வகைப்பொறுப்பு கூறவைப்பது, உள்ளிட்ட அதிகாரத்தோடு – சட்டங்களை ஆக்குதல், திருத்துதல் மற்றும் நீக்குதல் என்பனவாகும்.
அதற்கும் அப்பால் பாராளுமன்றம் பகிரங்க நிதிகளின் கட்டுக்காவலாளியாக இருப்பதனால் நிறைவேற்றுத்துறை பாராளுமன்றதின் அங்கீகாரமின்றி, பகிரங்கப்பணத்தை திரட்டவோ, செலவழிக்கவோ முடியாது என்பதை வலியுறுத்துகின்றது.
இலங்கை பாராளுமன்றம் 1833 ஆம் ஆண்டில் இருந்து ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப்பரிணாமம் மற்றும் வளர்ச்சிச் செயன்முறையின் ஊடாக இன்றுவரை ஜனநாயகக் கடமைகளை ஆற்றுவதற்காக இயங்கிக்கொண்டுள்ள நிலையில், 1977 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை factseeker இங்கே இணைத்துள்ளது.
1977 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை நாட்டில் ஏற்பட ஆட்சி மாற்றங்களின் போதும், ஜனநாயகத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போதும், அதேபோல் ஜனநாயகத்தை கேள்விக்கு உற்படுத்தும் விதமாக நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களின் போதும், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் போதும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சேவையாற்றிய உறுப்பினர்களின் தமது பாராளுமன்ற சேவைக்காலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பத்து வருடங்களுக்கு மேல் பாராளுமன்ற அனுபவத்துடன், தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் முழுமையாக,