நடிகர் வில் ஸ்மித் விபத்தொன்றில் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

நடிகர் வில் ஸ்மித் குறித்து போலியான செய்தியே சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது.
by Anonymous |
மார்ச் 26, 2025

பிரபல ஹாலிவூட் நடிகரான வில் ஸ்மித் விபத்தொன்றில் உயிரிழந்ததாக செய்தியொன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது.
இது குறித்த எந்தவொரு நம்பத்தகுந்த செய்திகளும் வெளியாகவில்லை. மேலும், நேற்று, நடிகர் வில் ஸ்மித் தனது சமூகவலைத்தள பக்கங்களில் “Based On True Story” எனும் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
ஆகவே. பிரபல ஹாலிவூட் நடிகரான வில் ஸ்மித் விபத்தொன்றில் உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற செய்தி போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.