நடிகர் அமிதாப் பச்சன் காலமானதாக பகிரப்படும் போலிச்செய்திகள்
நடிகர் அமிதாப் பச்சன் காலமானதாக நம்பக்கூடிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
by Anonymous |
டிசம்பர் 24, 2024
இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகரான அமிதாப் பச்சன் காலமானதாக புகைப்படம் ஒன்றுடனான செய்திகள் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
இப் புகைப்படத்தை பலரும் தமது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இது தொடர்பாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனவா என ஆராய்ந்ததில், இது குறித்த நம்பக்கூடிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், நடிகர் அமிதாப் பச்சனின் சமூகவலைதள பக்கங்களை ஆராய்ந்ததில், இன்று வரை அவரால் பல பதிவுகள் பகிரப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது. இதன் மூலம் அவர் இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தமுடிகிறது.
https://www.facebook.com/amitabhbachchan
ஆகவே, நடிகர் அமிதாப் பச்சன் காலமானதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.