தேர்தல் ஆணைக்குழுவிற்காக புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக போலிச்செய்தி
வட்ஸ்-அப் குழுக்களில் இவ்வாறு பல்வேறு போலிச்செய்திகள் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
by Anonymous |
ஆகஸ்ட் 9, 2024
தேர்தல் ஆணைக்குழுவிற்காக புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் வட்ஸ்-அப் குழுக்களில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றமையை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் இவ்வாறு பகிரப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக factseeker உறுதிப்படுத்துகின்றது.
இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளது.
அதில், தேர்தல் ஆணைக்குழுவிற்காக புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக பகிரப்படும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை எனவும், சரியான மற்றும் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ ஊடகங்களின் ஊடாக இணைந்திருங்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.