தேசிய மக்கள் சக்தியில் ‘மொஹமட் இப்ராஹிம்’ போட்டியிடுவதாக போலிச்செய்தி
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆராய்ந்ததில் அப்பட்டியலில் மொஹமட் இப்ராஹிமின் பெயர் இல்லை
by Anonymous |
அக்டோபர் 10, 2024
ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் இருவரின் தந்தையான தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
அப்பதிவுகளுக்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.
இதன் உண்மைத்தன்மையை அறிய தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆராய்ந்ததில் அப்பட்டியலில் மொஹமட் இப்ராஹிமின் பெயர் இல்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும், வேறு மாவட்டத்திலோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளரிலோ இவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில் அவற்றிலும் இவரது பெயர் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவினரிடம் FactSeeker வினவிய போது, 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது இவரது பெயரை தேசிய பட்டியலில் உள்ளடக்கியதாகவும், இந்த ஆண்டு இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி எந்த மாவட்டத்திலும் இவர் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஆகவே,மொஹமட் இப்ராஹிம், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.