வாக்குறுதியளிக்கப்பட்டதற்கமைய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வரவு செலவு திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
by Anonymous |
பிப்ரவரி 24, 2025

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவு திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வேலையற்ற பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், அதில் 35,000 முதல் 40,000 பேர் வரை தாதியர் மற்றும் குடும்ப சுகாதாரத் துறையில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் கூறினார்.
35,000 பட்டதாரிகளுக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக ஜனாதிபதி தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
30,000 அரசவேலை வெற்றிடங்களை நிரப்புவது வேறு விடயம் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், 35,000 பட்டதாரிகளுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என்று மேலும் கூறினார்.
இது தொடர்பில் பெரும் விவாதம் எழுந்துள்ளதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்ததில் அதில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுத்துறையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
Sinhala
|