ஜனாதிபதி அநுரவின் புகைப்படத்துடன் 5000 ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதா ?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படத்துடனான நாணயத் தாள்கள் போலியாக தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.
by Anonymous |
நவம்பர் 4, 2024
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படத்துடன் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் 5000 மற்றும் 10000 ரூபா நாணயத்தாள்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.
இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், 10000 ரூபா நாணயத்தாள் போலியானது என்பதுடன் சில மாதங்களுக்கு முன்னரே இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் இது போலியாக வடிவமைக்கப்பட்ட புகைப்படம் என்பது ஏற்கனவே AFP செய்திச்சேவை தெளிவுபடுத்தி செய்தியொன்றை பிரசுரித்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
இணைப்பு :-https://factcheck.afp.com/doc.afp.com.36FU4NE
அதேபோல் 5000 ரூபா நாணயத்தாளும் போலியாக வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதையும் factseeker இனால் கண்டறிய முடிந்தது.
குறிப்பாக Search any image with Lens , Forensically Image Verification Tool, fotoforensics ஆகியவற்றின் மூலமாக இந்தப்படத்தை ஆராய்ந்ததின் மூலம் இதுவும் போலியான புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும் இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்திடம் வினவிய போது,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படத்துடன் நாணயத் தாள்கள் அச்சிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படத்துடனான நாணயத் தாள்கள் போலியாக தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.