ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயமானது இராஜதந்திர விஜயம் என்றும், அங்குள்ள இலங்கையர்களுடனான சந்திப்பும் உத்தியோகபூர்வ சந்திப்பு என்றும் factseeker உறுதிப்படுத்துகிறது.
by Anonymous |
ஆகஸ்ட் 27, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயமானது உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, இது தனிப்பட்ட விஜயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நேர்காணல் ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் FactSeeker அவதானம் செலுத்தியது.
கடந்த 23 ஆம் திகதி நியூஸ் சென்டர் யூடியூப் அலைவரிசையில் ஊடகவியலாளர் மஞ்சுள பஸ்நாயக்கவுடனான நேர்காணலில் ஹிருணிகா பிரேமச்சந்திர இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
காணொளி இங்கே – https://x.com/SPriyawickrama/status/1959940313742729480
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தியதில்,
வெளியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ வலைதளத்தையும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ வலைதளத்தையும் அவதானித்த போது, இந்த விஜயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிவிப்புகளை அவதானிக்க முடிந்தது.
கடந்த 2025.06.11 முதல் 2025.06.13 வரை ஜனாதிபதி இந்த விஜயத்தில் பங்குபற்றியிருந்தார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பேர்லினில் உள்ள பெல்லூவ் மாளிகையில் ஜெர்மன் ஆயுதப்படைகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றன. அந்த வகையில் ஜனாதிபதி மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டதால், இது ஒரு அதிகாரப்பூர்வ விஜயம் என்பது தெளிவாகிறது. மேலும், விஜயத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகள் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தன.
ஆகவே, ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்ததைப்போல்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயமானது ஒரு தனிப்பட்ட விஜயம் அல்ல என்பது தெளிவாகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயம் உத்தியோகபூர்வ விஜயமாக இருந்தாலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது தனது கட்சி உறுப்பினர்களையும் அவர் சந்தித்திருந்தார் என ஹிருணிகா பிரேமச்சந்திரவின் இன்னொரு காணொளி பகிரப்பட்டுள்ள நிலையில் அது குறித்தும் factseeker கவனம் செலுத்தியது.
காணொளி இங்கே – https://x.com/NewsCenterLk/status/1959983970826994052
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தனது கட்சி உறுப்பினர்களை சந்தித்திருந்தாரா என ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் வினவியபோது, இந்த விஜயத்தின் கடைசி நாளில் (ஜூன் 13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் ஒரு சந்திப்பு இருந்ததாகவும், ஜெர்மனியில் வசிக்கும் தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்களும் வெளியிடப்படிருந்தன
https://www.facebook.com/share/p/1EnkfUMpLW/
அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனி விஜயமானது இராஜதந்திர விஜயம் என்றும், அங்குள்ள இலங்கையர்களுடனான சந்திப்பும் உத்தியோகபூர்வ சந்திப்பு என்றும் factseeker உறுதிப்படுத்துகிறது.