Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

False
False

நுவரெலியாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கூடையைச் சுமந்து செல்வதாக சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் திருத்தப்பட்ட போலியான ஒன்றாகும்.

by Anonymous |

பிப்ரவரி 12, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் (11 ஆம் திகதி) நுவரெலியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, அவர் தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த புகைப்படம் facebook இல் பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டுள்ளதுடன், அதற்கு எதிராகக் கடுமையான அரசியல் விமர்சனங்களும் நகைச்சுவையான பதிவுகளும் இடப்பட்டுள்ளன.

இருப்பினும், இது குறித்து FactSeeker மேற்கொண்ட விசாரணையில், குறித்த புகைப்படம் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்ட (manipulated) ஒன்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையான பின்னணி
கடந்த புதன்கிழமை (11) பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நுவரெலியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அந்த மாவட்டத்தின் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் சுகதுக்கங்களை விசாரித்ததுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை AI தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்து, ஜனாதிபதி தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையை அணிந்திருப்பது போன்று சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ஆதாரங்கள்
உத்தியோகபூர்வ மூலங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) இந்த நிகழ்வின் உண்மையான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் ஜனாதிபதி தொழிலாளர்களுடன் உரையாடுவதைக் காண முடிகிறதே தவிர, அவர் அத்தகைய கூடையைச் சுமந்து செல்லவில்லை.

Photo Link: https://drive.google.com/drive/folders/1jG3P1_0q_ZAkP1o1qo1RlTM0rqjzTr9Y?usp=sharing

ஊடக அறிக்கைகள்: பல முன்னணி ஊடகங்கள் இந்த நிகழ்வை அறிக்கையிட்டுள்ளன. வைரலாகி வரும் பதிவிற்கு முரணான உண்மையான காட்சிகளைப் பகிர்ந்துள்ளன.

வீடியோ ஆதாரம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் நுவரெலியா விஜயம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுடனான சந்திப்பு தொடர்பான உத்தியோகபூர்வ வீடியோவை இங்கே காணலாம்:

Video Link: https://drive.google.com/file/d/1zv26u277ZSRwpKZ2ETEO2wGIF1ZbVfrm/view?usp=sharing

முடிவு
சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஜனாதிபதி தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்லும் புகைப்படம் திருத்தப்பட்ட (morphed) ஒன்று என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection